'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலித்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' |
சின்னத்திரையில் சீரியல்களில் ஒரு காலத்தில் பேவரைட் ஹீரோவாக வலம் வந்த பிரஜின் பத்மநாபன் தற்போது வெள்ளித்திரை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட வாய்ப்புக்காக 'வைதேகி காத்திருந்தாள்' தொடரிலிருந்து சில எபிசோடுகளுடன் விலகிவிட்டார். பிரஜின் நடிப்பில் டி-3 திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் 'ஹையானா', 'நினைவெல்லாம் நீயடா' என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமா என்ட்ரிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் மீண்டும் வரமாட்டார் என பிரஜினின் ரசிகர்கள் கவலையுற்றிருந்த நிலையில், அவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்கிற தொடரில் பிரஜின் கடவுள் முருகனாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதன் புரோமோவை பார்க்கும் போது சீடன் படத்தில் தனுஷின் சரவணன் கதாபாத்திரத்தை காப்பி அடித்திருப்பது போல் உள்ளது.