பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் விக்ரம் தான் தேர்ந்தெடுக்கும் கதைக்கேற்ற மாதிரி அவரின் உடல் தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடிப்பதில் மிகவும் திறமையானவர். கடந்த சில வருடங்களாக இவர் தனியாக கதாநாயகனாக நடித்த எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை.
குறிப்பாக அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோப்ரா. அந்த படமும் தோல்வி ஆனது. தற்போது அவரது நடிப்பில் வெளி வர வேண்டிய படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என உறுதியாக நடித்து வருகிறார்.
கடந்த வருடம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். அதே மாதிரி இந்த வருடமும் பொன்னியின் செல்வன் பாகம் 2ல் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
அதற்கு அடுத்த மாதம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் ரிலீஸாக உள்ளது.
இதையடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படமும் இந்த வருடமே ரிலீஸ் ஆகும் என கூறுகின்றனர்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டு நீண்ட வருடம் கிடப்பில் உள்ள விக்ரம் நடித்துள்ள படம் கரிகாலன். மீண்டும் இப்படத்திற்கான வேலைகளை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கருடா என்ற படத்திற்கான பேச்சுவார்த்தை விக்ரம் உடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சமர், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்குகிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.