விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்காக நடிகர் ரஜினிக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ரஜினியும் இந்த அழைப்பை ஏற்று, கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க சென்றார். மைதானத்தின் விஐபி கேலரியில் அவர் போட்டியை ரசித்து பார்த்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.