பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்', டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், அடுத்தபடியாக அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள சொப்பன சுந்தரி என்ற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் அவருடன் லட்சுமி பிரியா, கருணாகரன், சதீஷ் உள்பட பல நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் டிரெய்லரும் வெளியாக இருப்பதோடு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது. இதுதவிர, விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.