பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மற்றும் பலர் நடித்து பிப்ரவரி 17ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியான படம் 'வாத்தி'. இப்படம் மூன்று நாட்களில் 50 கோடி வசூலையும், 8 நாட்களில் 75 கோடி வசூலையும் பெற்றதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த வாரம் வெளியான சில படங்களைக் காட்டிலும் 'வாத்தி' படத்தின் வசூல் கடந்த இரண்டு நாட்களிலும் சிறப்பாக இருந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வசூலாக 30 கோடி, தெலுங்கு மாநில வசூலாக 30 கோடி பெற்ற இப்படம் கர்நாடகாவில் சுமார் 7 கோடி வசூலைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. கேரளாவில் மட்டும்தான் மோசமாக வசூலித்துள்ளது. அங்கு ஒரு கோடி வசூலை நெருங்கவே திண்டாடி வருகிறது. வெளிநாடுகளில் சுமார் 20 கோடி வசூலை வசூலித்துள்ளதாம். மொத்தமாக கடந்த பத்து நாட்களில் 87 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் 100 கோடி வசூலைத் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் வசூல் சிறப்பாக உள்ளதாகச் சொல்கிறார்கள். நேரடியாக தெலுங்கில் நடித்ததன் மூலம் அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார் தனுஷ். தமிழை விடவும் தெலுங்கு ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துள்ளது என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இந்த வாரமும் படம் ஓடினால் 100 கோடி வசூலைத் தாண்ட வாய்ப்புள்ளது என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்.