தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதோடு விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துள்ளாராம். இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இதனை ஒரு பான் இந்திய படமாக்க திட்டமிட்டு உள்ளார் கவுதம் மேனன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நடித்த எந்த படமும் சமீபத்தில் வெற்றி பெறவில்லை . தொடர் தோல்விகளை கொடுத்த இவர்கள் தோல்வியில் இருந்து மீண்டு கூட்டணியாக ஒரு நல்ல வெற்றி திரைப்படம் தருவார்களா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பி வருகிறது.




