இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தங்கலான்'. 1800களின் இறுதிக்கட்டம், 1900ம் ஆண்டுகளின் ஆரம்பக் கட்டத்தில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. கர்நாடகா மாநிலத்தின் கேஜிஎப் தங்கச் சுரங்கத்தில் அந்த காலகட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வேலைக்குச் சென்றனர். அவர்களது வாழ்வியல் சம்பந்தப்பட்ட படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோரும் மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க தற்போது ஆங்கிலேயே நடிகரான டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளார்.
1998ல் வெளிவந்த 'லெகியோநேய்ர்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் அவர் நடித்து வெளிவந்த 'த பீச், லாரா க்ரோப்ட் டாம்ப் ரைடர் த க்ராடில் ஆப் லைப், மற்றும் ஆஸ்கர் விருது வென்ற 'த பியானிஸ்ட்' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர். பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
'தங்கலான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மட்டுமல்லாமல் டுவிட்டர் தளத்திலும் புதிய கணக்கைத் துவங்கி அறிமுகமாகியுள்ளார். அவரை விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றுள்ளார்கள்.