லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளது உறுதி. அப்படம் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்கு மிகவும் பிடித்த நாளான நாளை வியாழக்கிழமை அறிவிப்பு வெளியாகலாம், அல்லது இன்றே கூட வரலாம் எனச் சொல்கிறார்கள்.
படத்திற்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசை என்று சொல்லப்பட்ட நிலையில் அனிருத் இசைமைக்க உள்ளார் என்பது லேட்டஸ்ட் தகவலாக இருக்கிறது. மகிழ் திருமேனி பெயரில் சமூக வலைத்தளங்களில் சில கணக்குகளில் இருந்து அஜித் 62 பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதனால், அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சார்பில் மகிழ் திருமேனி எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டார்கள்.
தொடர்ந்து பொய்யான பல தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தலைப்புடன் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பையும் உடனே ஆரம்பிக்க அஜித் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் உலகச் சுற்றுலா செல்ல உள்ளார் என்றும் தகவல்.