விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
கும்பகோணத்தை சேர்ந்த 7வது வகுப்பு படிக்கும் 12 வயது பள்ளி மாணவி அகஸ்தி, 'குண்டான் சட்டி' என்கிற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார். இதனை ஏ.எஸ்.கார்த்திகேயன் தயாரித்துள்ளார். 8 மாதங்களாக தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து அவர் இந்த படத்தை உருவாக்கி உள்ளார். அரசங்கன் சின்னத்தம்பி என்பவர் திரைக்கதை வசனம் எழுதி உள்ளர். அமர்கீத் இசை அமைத்துள்ளார். அகஸ்தி, காட்சிகள் எப்படி வரவேண்டும் என்பதை சொல்லச் சொல்ல அனிமேஷன் டெக்னீஷியன்கள் அதனை உருவாக்கி இருக்கிறார்கள்.
படத்தின் கதை இதுதான்: கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள்.
குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாக படிக்கிறார்கள். அவர்களது கிராமத்தில் கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக ஏமாற்றுகிறார்கள். இதனால் இருவரையும் ஊரை விட்டு துரத்துகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.