புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர். மற்ற கதாநாயகர்களைப் போல அல்லாமல் ஹிந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம் என அவர் பதித்துள்ள தடம் வேறு. முதல் முறையாக தெலுங்கில் நேரடிப் படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழில் 'வாத்தி', தெலுங்கில் 'சார்' என இரண்டு மொழிகளில் தனித்தனியே எடுக்கப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம் இந்த வாரம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது.
தமிழ் நடிகர்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்கள். கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படம் தமிழில் நேரடியாக படமாக்கப்பட்டு தெலுங்கில் டப்பிங் ஆகி ஒரே நாளில் வெளியானது. ஆனால், இரண்டு மொழிகளிலும் தோல்வியடைந்தது. இந்த பொங்கலுக்கு விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகின, அவையும் பெரிதாக அங்கு ஓடவில்லை. அவையெல்லாம் டப்பிங் படங்களாகவே வெளியாகின.
அதேசமயம் 'வாத்தி, சார்' இரண்டும் தனித் தனியாக அந்தந்த மொழிகளில் நேரடியாக படமாக்கப்பட்டு வெளியாக உள்ளன. தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம் மொழிகளில் தடம் பதித்துள்ள தனுஷ் தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.