பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' |

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு நடித்த 'சந்திரமுகி' தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாள் ஓடி சாதனை படைத்த படம். இந்த படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இது 'மணிசித்ரதாழு' என்ற மலையாள படத்தின் ரீமேக். மலையாளத்தில் ஷோபனா நடித்திருந்த கேரக்டரில் தமிழில் ஜோதிகாக நடித்திருந்தார்.
தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகி வருகிறது. இதில் ரஜினி நடிக்க மறுத்து விட்டதால், அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ஜோதிகாக நடிக்க மறுத்து விட்டதால் அவருக்கு பதிலாக கங்கனா ரணவத் நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையல் கடந்த 2019ம் ஆண்டு தனக்கு பிடித்த நடிகை கங்கனா தான் என்று ஜோதிகா பேசிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, “இது எனக்கு ஊக்கமளிக்கிறது. சந்திரமுகி படத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய மிகச்சிறந்த நடிப்பை தற்போது நாள்தோறும் நான் பார்த்து வருகிறேன். ஏனென்றால், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை நாங்கள் படமாக்கி வருகிறோம். சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பை அளிக்கக்கூடியது. அவருடைய நடிப்பை ஈடு செய்துவது சாத்தியமற்றது”என பதிவிட்டுள்ளார்.