ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி அடுத்தபடியாக லால் சலாம் என்ற படத்தை இயக்கப் போகிறார். ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப் போகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் செட் ஒர்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அண்ணாமலையார் அருள் ஆசியுடன் செட் ஒர்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் நன்றி என ஐஸ்வர்யா ரஜினி செட் ஒர்க் பூஜை குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.