ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை கொடைக்கானலில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிருக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தற்போது இரவு நேரத்தில் நெருப்பை பற்ற வைத்து குளிர் காயும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்த புகைப்படத்தில் விஜய், கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ் உட்பட படக் குழுவினர் பலரும் இடம்பெற்றுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அனிருத் இசையமைக்கும் இந்த லியோ படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூரலிகான், சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.