சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. மூன்று மொழிகளில் முன்னணி நடிகை என்றாலும் கடந்தாண்டு இவருக்கு வெற்றியான ஆண்டாக அமையவில்லை. தமிழில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் வெளியான ராதே ஷ்யாம், ஹிந்தியில் வெளியான சர்க்கஸ் போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை. இது அவருக்கு வருத்தம் தான் என்றாலும் அதை பெரிதாக எடுக்காமல் நேர்மறையான சிந்தனையுடன் முன்னோக்கி செல்கிறார்.
தொடர் தோல்வி குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : ‛‛வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை. நாம் எடுக்கும் முடிவுகள் சில சமயம் தோல்விகளை தரலாம். தவறு நடந்தால் அதற்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து திருத்திக் கொள்வேன். ஏனென்றால் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் தான் நான் இப்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். இனி கவனமுடன் படங்களை தேர்வு செய்வேன்'' என்கிறார்.