'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடித்துள்ள சரித்திரப் படம் 'சாகுந்தலம்'. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீடு இரண்டு முறை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். முதலில் கடந்த வருடம் நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து தள்ளி வைத்தார்கள். அடுத்து இரண்டாவது முறையாக பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து தள்ளி வைத்தார்கள். இப்போது மூன்றாவது முறையாக ஏப்ரல் 14 என்று புதிய தேதியை அறிவித்துள்ளார்கள். இதற்கு மேலும் படத்தைத் தள்ளி வைக்க மாட்டார்கள் என நம்பலாம்.
தெலுங்கில் 'ஒக்கடு' படத்தின் மூலம் பெரும் வெற்றியைக் கொடுத்தவர் இயக்குனர் குணசேகர். அப்படம்தான் தமிழில் விஜய் நடிக்க 'கில்லி' என ரீமேக்கானது. 2015ல் அனுஷ்கா நடித்த 'ருத்ரமாதேவி' என்ற சரித்திரப் படத்தை இயக்கினார் குணசேகர். அடுத்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 'சாகுந்தலம்' படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.