பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
2023ம் ஆண்டு இரண்டு பெரிய நடிகர்களான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களுக்குக் கொஞ்சம் தெம்பைத் தந்தன. எப்படியோ இரண்டு வாரங்களாவது அந்தப் படங்களை வைத்து ஓட்டிவிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த வாரம் பிப்ரவரி 3ம் தேதி வெளியான ஆறு படங்கள் தியேட்டர்களை நிறையவே தடுமாற வைத்துள்ளன.
அதில் சில படங்களுக்கு படம் வெளியான முதல் நாளே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வராமல் 'ஷோ பிரேக்' ஏற்பட்டுள்ளது. 'ரன் பேபி ரன்' மட்டும் சில நாட்களுக்கு கொஞ்சம் ரசிகர்களை வரழைத்துள்ளது. மற்ற படங்கள் நிலை நிறையவே மோசம் என்கிறார்கள். தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்க எந்த ஒரு திட்டமும் அந்தப் படங்களைத் தயாரித்த நிறுவனங்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம் என தியேட்டர் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு மாநகரங்களிலேயே பல தியேட்டர்களில் அந்தப் படங்களுக்கு ஷோ பிரேக் நடந்துள்ளது என அதிர்ச்சித் தகவலையும் தருகிறார்கள். இன்று பிப்ரவரி 10ம் தேதி “டாடா, கொடை, கூட்டம், நினைவே நீ, வர்ணாஸ்ரமம், வசந்த முல்லை” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களில் எதற்குக் கொஞ்சமாவது கூட்டம் வரும் எதற்கு ஷோ பிரேக் வரும் என்ற ஒரு அதிர்ச்சியிலேயே தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம்.
சிறிய பட்ஜெட் படங்களை ஓட்ட சிறு பிளான் எதையாவது செய்வார்களா என பல வருடங்களாகத் தியேட்டர்காரர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால், அது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.