செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தெலுங்கு இளம் நடிகர் சத்யதேவ், கன்னட இளம் நடிகர் தாலி தனஞ்செயா இணைந்து நடிக்கும் பான் இந்தியா படம் ஜீப்ரா. இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இதில் சத்யதேவ் ஜோடியாக பிரியா பவானி சங்கரும், தாலி தனஞ்ஜெயா ஜோடியாக ஜெனிபர் பிசினாடோவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சத்யா, அகில், சுனில் உள்பட பலர் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். பத்மஜா பிலிம்ஸ் தயாரிக்கிறது.
படம் பற்றி இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் கூறியதாவது: ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்தும். சதுரங்க ஆட்டத்தைப் போலவே படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். இரண்டு வலிமை மிக்கவர்களின் மோதல் தான் படம். முதல் ஷெட்யூலை 50 நாளில் முடித்துள்ளோம். அடுத்த ஷெட்யூல் ஐதராபாத், கோல்கட்டா மற்றும் மும்பை பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்றார்.