ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தற்போது அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை தொடர்ந்து அவரது திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைய இருக்கும் ஐம்பதாவது படத்தை அவரே இயக்குகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கேங்ஸ்டர் பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட இயக்குனரான மித்ரன் ஜவஹரும் இணைந்துள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆம்.. இந்த படத்தின் கதை விவாதத்தில் தான் தனுசுடன் இணைந்து பணியாற்றுகிறாராம் மித்ரன் ஜவஹர். தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதைத்தொடர்ந்து அவரை வைத்து குட்டி, உத்தமபுத்திரன் என அடுத்தடுத்த படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தனுஷுடன் நான்காவது முறையாக இணைந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இவர் தனுஷுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.