ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
‛‛தமிழரசன், அக்னிச் சிறகுகள், கொலை, காக்கி, மழை பிடிக்காத மனிதன், வள்ளிமயில், பிச்சைக்காரன் 2'' உள்ளிட்ட படங்கள் விஜய் ஆண்டனி கைவசம் உள்ளன. இவற்றில் தமிழரசன், அக்னிச் சிறகுகள் படம் விரைவில் ரிலீஸாக உள்ளன. விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் பிச்சைக்காரன். சசி இதை இயக்கி இருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்து, தயாரித்தும் வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவின் லங்காவி தீவில் நடைபெறுகிறது.
படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி விஜய் ஆண்டனி தரப்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, ‛‛பயப்படும்படி ஒன்றுமில்லை. அவர் நலமாக உள்ளார்'' என தெரிவித்தனர்.