ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவரது பல படங்கள் வசூல் சாதனை படைத்தவை. இந்த பொங்கலுக்கு அவர் நடித்து வெளிவந்துள்ள 'வால்டர் வீரய்யா' படமும் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநில முக்கிய நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டிணத்தில் சிரஞ்சீவி வீடு கட்டப் போவதாக அறிவித்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தை விட்டு அவர் விசாகப்பட்டிணத்தில் வசிக்கப் போகிறார் என்ற வதந்தியும் பரவியது. அதை பலரும் அரசியலாக்கி செய்திகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து சிரஞ்சீவி, “அங்கு ஒரு இடத்தை வாங்கினோம் என்பது பற்றி சொன்னேன், வேறு எதுவுமில்லை. எனது மகன் ராம் சரண் கோவாவில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். எனக்கு ஊட்டியில் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. அது ஏறக்குறைய ரெடியாகிவிட்டது. அவற்றை முடித்த பின் விசாகப்பட்டிணத்திலும் வீடு கட்டலாம் என்றேன்,” என்று தெரிவித்துள்ளார்.
பல தெலுங்குப் படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. சிரஞ்சீவியின் பல படங்களும் அதில் அடங்கும். இந்திய நடிகர்கள் பலருக்கும் ஊட்டி மிகவும் பிடித்தமான இடம். சிலருக்கு அங்கு வீடுகள் மட்டுமல்ல எஸ்டேட்களும் இருக்கின்றன.