ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் கீரவாணி இசையில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
படக்குழுவினர் தொடர்ந்து சில விருது நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அப்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பு பற்றி இயக்குனர் ராஜமவுலி, “மிகச் சிறந்தவரான ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்ததால் மனைவியையும் படம் பார்க்க பரிந்துரை செய்து மனைவியுடன் மீண்டும் ஒரு முறை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சார், படத்தைப் பற்றி எங்களுடன் 10 நிமிடங்கள் அது குறித்து விவாதித்ததை மறக்க முடியாது. நீங்கள் சொன்னது போல நான் இந்த உலகத்தின் உச்சியில் நிற்கிறேன், உங்கள் இருவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.