மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு இயக்குனராக வம்சி பைடிப்பள்ளி தெலுங்கில் குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 2007ம் ஆண்டு பிரபாஸ் நடித்த 'முன்னா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின் ஜுனியர் என்டிஆர் நடித்த 'பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த 'எவடு', நாகார்ஜுனா கார்த்தி நடித்த 'ஊபிரி', தமிழில் 'தோழா', மகேஷ் பாபு நடித்த 'மகரிஷி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அனைத்துமே முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள்தான்.
விஜய் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'வாரிசு' அவரது இயக்கத்தில் வந்த இரண்டாவது தமிழ்ப் படம். இப்படம் நேற்றுதான் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி பிரம்மாண்டமாக வெளியானது. நேற்று வம்சி பைடிபள்ளி 'வாரசுடு' படத்தை அவரது அப்பாவுடன் தியேட்டரில் பார்த்தார். படம் முடிந்த பின் வம்சியின் அப்பா தன் மகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.
அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “வாரசுடு' படத்தை இன்று அப்பா பார்த்து மகிழ்ந்தது எனது மிகப் பெரிய சாதனை. எனது வாழ்நாள் முழுவதும் எனது மனதில் வைத்து இத்தருணத்தைப் போற்றுவேன். நீங்கள்தான் என் ஹீரோ அப்பா. உங்களை எப்போதும் நேசிக்கிறேன்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கிலும் 'வாரிசு' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.