ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவர் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'துணிவு' படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியிருந்தார். பட வெளியீட்டிற்குப் பின் இயக்குனர் வினோத், தனது நண்பர் இயக்குனர் இரா.சரவணனுடன் சபரிமலை சென்றுள்ளார். சபரிமலைக்குச் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட வீடியோவையும் சரவணன் பகிர்ந்துள்ளார். அங்கு ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகமும் செய்துள்ளார்.
அஜித்தின் அடுத்த படமான அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அவரும் தற்போது சபரிமலை சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்ட விக்னேஷ் சிவன் எரிமேலி சாலையில் உள்ள வழிப் பலகை முன்பாக நின்று கொண்டுள்ள புகைப்படத்தைப் பதிவிட்டு, “சுவாமியே சரணம் ஐயப்பா, உன்னைக் காண ஆவலுடன் வருகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலாமவர் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கவும், இரண்டாமவர் அடுத்த வெற்றிக்காகவும் ஐயப்பனை வழிபட சென்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.