பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் |
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் வெளியீடாக ஜன., 11ல் வெளியாகி உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜு தயாரித்துள்ளார்.
நான் விஜய் படத்தில் நடிக்கிறேன் என்று குறிப்பிட்ட பல நட்சத்திரங்களை படத்தில் காணவில்லை. குறிப்பாக பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டி செல்கிறார். நடிகர் சதீஷ் அட்மாஸ்மியர் ஆர்ட்டிஸ்டாக வருகிறார். குறிப்பாக நடிகை குஷ்புவை எங்கேயும் காண முடியவில்லை.
விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் செல்பி எடுக்கும் படத்தை வெளியிட்டு வாரிசு படத்தில் நடிப்பதை குஷ்பு உறுதி செய்திருந்தார். விஜய்யும் “சிறிய வேடமாக இருந்தாலும் குஷ்பு பெருந்தன்மையோடு நடித்து கொடுத்தார்” என்று பாடல் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. குஷ்பு நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. குஷ்பு உடல் எடை குறைத்த பிறகு வரும் முதல் ஸ்கிரீன் பிரசன்ட் என்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது.