நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மலையாள திரையுலகில் பிரேமம், நேரம் என்கிற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் இவரது இயக்கத்தில் கோல்ட் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் கேரளாவில் நர்ஸ் ஒருவர் ஹோட்டலிலிருந்து வரவழைத்த கெட்டுப்போன இறைச்சி உணவை சாப்பிட்டு உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள அல்போன்ஸ் புத்ரன், தானும் இதுபோன்ற ஒரு நிலைக்கு ஆளானதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “15 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் நடிகர் ஷராபுதீன் (பிரேமம் படத்தில் அறிமுகமானவர்) எனக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக எனக்கு சவர்மா வாங்கிக் கொடுத்தார். அதை சாப்பிட்ட பின்னர் மறுநாள் காலையிலேயே நான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்தேன். அதிலிருந்து நான் குணமடைந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வரை மருத்துவ செலவு ஆனது. காரணம் கெட்டுப்போன அந்த உணவு புட் பாய்சன் ஆக மாறியதுதான்.
ஒருகட்டத்தில் எனக்கு ட்ரீட் கொடுத்த ஷராபுதீன் மேல் கூட கோபம் வந்தது. ஆனால் உண்மையான கோபம் யார் மீது வர வேண்டும் ? அந்த 70 ஆயிரம் ரூபாய்க்காக என் பெற்றோர் பல பேரிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி செலவு செய்து என்னை காப்பாற்றினர். மீடியாக்கள் கேள்வி எழுப்ப வேண்டியது இது போன்ற விஷயங்களில் தான்: என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்