'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது தனது முதல் படமான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அருள்நிதியை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் டிமான்டி காலனி 2 படம் குறித்து அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டு அனைத்து காட்சிகளுமே தனக்கு திருப்தியாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தைப்ப்போலவே இந்த இரண்டாம் பாகமும் திரில்லர் கதையில் உருவாகி வருகிறது.