பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? | மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்த்ரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாரிசு'. இப்படத்தின் இசை வெளியீடு நாளை (டிசம்பர் 24ம் தேதி) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் எப்படியாவது அனுமதிச் சீட்டு வாங்கி கலந்து கொள்ள வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலரும் முயற்சித்து வருகிறார்களாம். ஆனால், ஒரு மாவட்டத்திற்கு வெறும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்று ரசிகர் மன்றத்தில் சொல்லிவிட்டார்களாம். சரி, நேரிலாவது வர முடியவில்லை, அப்போதே உடனுக்குடன் 'யு டியூப் லைவ்' மூலம் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டவர்களுக்கும் ஏமாற்றம்தான் கிடைக்கும் எனத் தெரிகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார்களாம். 2023 புத்தாண்டு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் திட்டம் உள்ளதாம். அதனால், 'வாரிசு' இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒரு வாரம் கழித்து மட்டுமே பார்க்க வேண்டிய சூழ்நிலை விஜய் ரசிகர்களுக்கு. நிகழ்ச்சியை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்களின் கணக்குகளை முடக்கவும் திட்டம் வைத்துள்ளார்களாம்.