தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சென்னையில் கடந்த ஒருவாரமாக நடந்து வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்று நிறைவடைந்தது. இந்த விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 102 படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 30 படங்கள் போட்டியிட்டன. இதில் ஆதார், இரவின் நிழல், இறுதிப்பக்கம், மாமனிதன், கார்கி, கசடதபற, நட்சத்திரம் நகர்கிறது, கிடா, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் இறுதி சுற்றுக்கு தேர்வானது.
இதில் முதல்பரிசை பூ ராமு நடித்த 'கிடா'வும், இரண்டாவது பரிசை சிம்பு தேவன் இயக்கிய 'கசடதபற'வும் பெற்றன. சிறந்த நடிகருக்கான விருது நடிகர்கள் விஜய் சேதுபதி (மாமனிதன்), பூ ராமு (கிடா)ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. கார்கி படத்தில் நடித்த சாய்பல்லவி சிறந்த நடிகையாக அறிவி'கப்பட்டார். சிறப்பு நடுவர் விருது பார்த்திபன் இய'கிய 'இரவின் நிழல்'படத்துக்கும், சிறப்பு சான்றிதழ் விருது கருணாஸ் நடித் 'ஆதார்' படத்துக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த ஒலிப்பதிவாளர் அந்தோணி பிஜே ரூபன் (நட்சத்திரம் நகர்கிறது), சிறந்த படத்தொகுப்பாளர் சிஎஸ் பிரேம் (பிகினிங்), ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் (இரவின் நிழல்), ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நேற்று நடந்த நிறைவு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. கே.பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். சாய்பல்லவி விருதினை பெற வரவில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருது பாரதிராஜாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் விழாவுக்கு வரவில்லை. அந்த விருது பின்னர் அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.