‛‛அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால்...'': நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் வருத்தம் | தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் |
பாலிவுட் நடிகை தபு திரையுலகில் நுழைந்து 30 வருடங்களை கடந்து விட்டார். தமிழில் காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட இரண்டு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தபு, இந்த வருடத்தில் நடித்த பூல் புளையா-2 மற்றும் கடந்த நவம்பர் மாதம் வெளியான த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. சந்திரமுகி படத்தின் ஹிந்தி பதிப்பாக பூல் புலையா படம் 2007ல் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக பூல் புலையா-2 உருவாகி வெற்றி பெற்றது.
அதேபோல த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்து வெளியான திரிஷ்யம்-2வும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தபு நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் அஜய் தேவனுடன் கைதி ரீமேக்காக ஹிந்தியில் உருவாகிவரும் போலா என்கிற படத்தில் நடித்துள்ளார் தபு.
தமிழில் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் ஹிந்தியில் தபு நடித்துள்ளார். இந்த படமும் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படம் ஹிந்தியிலும் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்தவகையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இப்போதிருந்தே காத்திருக்கிறார் நடிகை தபு.