விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
பாசில் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய், ஷாலினி, ஸ்ரீவித்யா, சிவகுமார், ராதாரவி, சார்லி, தாமு, தலைவாசல் விஜய், மணிவண்ணன், காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி வெளிவந்த படம் 'காதலுக்கு மரியாதை'.
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஷாலினி மற்றும் பலர் நடிக்க பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'அனியத்திபுராவு' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'காதலுக்கு மரியாதை'. அப்படம் மூலம் மலையாளத்தில் ஷாலினியை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய பாசில், அதே கதாபாத்திரத்தில் ஷாலினியை நடிக்க வைத்து தமிழிலும் அறிமுகப்படுத்தினார்.
90களில் காதல் படங்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இருந்தது. அதிகமான காதல் படங்கள் வந்த காலம் அது. 1996ம் ஆண்டில் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'பூவே உனக்காக' படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு விஜய் நடித்து வெளிவந்த ஏழு படங்களில் 'லவ் டுடே' படம் மட்டுமே ஓடியது. அப்படம் வெளிவந்த அதே 1997ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த படம்தான் 'காதலுக்கு மரியாதை'. அப்படத்தின் மாபெரும் வெற்றி விஜய்யின் வியாபார எல்லையை விரிவாக்கியது. அதன் பிறகு அவருடைய திரையுலகப் பயணத்தில் அதிகமான வெற்றிகள் அடுத்தடுத்து குவிய ஆரம்பித்தது.
விஜய், ஷாலினி இருவரின் காதல் நடிப்பு, விஜய்யின் பெற்றோர்களாக சிவகுமார், ஸ்ரீவித்யா ஆகியோரது பாசமான நடிப்பு, ஷாலினி மீது அதிகப் பாசம் கொண்ட குடும்பத்தின் மூத்த அண்ணன் ராதாரவி, அவரது மற்ற தம்பிகள், விஜய்யின் நண்பர்களாக சார்லி, தாமு, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு ஓனர் காக்கா ராதாகிருஷ்ணன், விஜய், ஷாலினிக்கு அடைக்கலம் கொடுக்கும் மணிவண்ணன் என ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர்களது நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
எப்போதும் ஒரு பயத்திலேயே பரபரவென முழித்துக் கொண்டிருக்கும் மினி கதாபாத்திரத்தில் ஷாலினியின் நடிப்பு அந்தக் கால இளைஞர்களுக்கு இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கும். எம்பிஏ படிக்கும் மாணவர் ஜீவா கதாபாத்திரத்தில் விஜய். 'என்னைத் தாலாட்ட வருவாளா' என்ற ஹரிஹரன் குரலுக்கு உதடுகளை லேசாகத் திறந்து பாடியதற்கே அவ்வளவு ரசிகர் கூட்டம் அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தது.
இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பழனி பாரதி. ''என்னைத் தாலாட்ட வருவாளா, ஆனந்தக் குயிலின் பாட்டு, ஒரு பட்டாம் பூச்சி, இது சங்கீதத் திருநாளோ, ஓ பேபி பேபி,” பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்து அப்போதெல்லாம் டிவிக்களில் விரும்பிக் கேட்ட, பார்த்த பாடல்களாக இருந்தன.
பாசில், இளையராஜா கூட்டணியில் வந்த பல படங்கள் இங்கு பெரிய வெற்றியைப் பெற்றன. அந்தக் கூட்டணியின் மிக முக்கியமான வெற்றிப் படம் 'காதலுக்கு மரியாதை'. அந்த வெற்றி இயக்குனர் பாசில் மகன் தான் மலையாள முன்னணி ஹீரோவான பகத் பாசில்.
விஜய் அவருடைய 66வது படமான 'வாரிசு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவர் இதுவரை நடித்த படங்களில் டாப் 5 படங்களில் இந்த 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு தனி இடமுண்டு.