துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! |
காதலில் சொதப்புவது, எப்படி வாயை மூடி பேசவும், மாரி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி மோகன். மாரி 2 படத்திற்கு பிறகு கடந்த நான்கு வருடங்களாக படம் எதையும் இயக்காத இவர், சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். இந்த நிலையில் இவரும் நடிகை தன்யா பாலகிருஷ்ணனும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்கிற தகவல் வைரலாக பரவி வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் தன்யா பாலகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து, கடந்த ஜனவரி மாதமே ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருகிறார்கள் என்கிற செய்தியும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து இவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை என்றாலும் விரைவில் இந்த தகவல் இவர்கள் மூலமாகவே வெளியாகும் என சொல்லப்படுகிறது.