தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'வாயை மூடி பேசவும்', தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'மாரி', தனுஷ், சாய்பல்லவியின் நடிப்பில் மாரி 2 ஆகிய படங்களை இயக்கினார். அதோடு மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' படத்தையும் தயாரித்தார்.
பாலாஜி மோகன் 2012ம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கும் போது அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அருணாவை விவாகரத்து செய்தார். இந்தநிலையில் தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ், பாலாஜி மோகன், நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவலை வெளியிட்டு பாலாஜி மோகன் மீதும், தன்யா மீதும் விமர்சனங்கள் வைத்தார்.
இதைத் தொடர்ந்து பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கும தன்யா பாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது, இது எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் நடிகை கல்பிகா கணேஷ் எங்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கல்பிகா கணேஷுக்கு நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கல்பிகா கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தான்யா குறித்து கல்பிகா வெளியிட்ட பதிவுகளை நீக்கி விட்டார். அதோடு இதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே வழக்கை முடித்து வைக்க கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து கல்பிகா மன்னிப்பு கேட்ட வீடியோவை நீக்க கூடாது என்ற நிபந்தனையுடன் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.