ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய்யின் தந்தையும் முன்னணி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். அவர் கதையின் நாயகனாக டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்குவதாக கூறி மலேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
பின்னர் அந்த படத்தை தானே வெளியிட்டதாகவும் அதற்காக பெற்ற 21 லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்பித் தராமலும் எஸ்.ஏ.சந்திரசேகர் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியம் சார்பில் மணிமாறன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிய 21 லட்ச ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாயை பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தைக் கொடுக்காமல் தனக்கும் வெளிநாட்டு வாழ் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மணிமாறன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.