நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர்கள் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை ரெஜினா. நேற்று தனது 32வது பிறந்தநாளை ரெஜினா கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தீப் கிஷன், அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா. லவ் யூ. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் . மகிழ்ச்சியாக இரு. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்'' என்று குறிப்பிட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது.
மாநகரம் படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே, சந்தீப் கிஷனும், ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஐதராபாத்தில் அடிக்கடி டேட்டிங் செய்கிறார்கள் என்று தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. என்றாலும் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.




