ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கதிர் இயக்கத்தில் அப்பாஸ், வினீத், தபு, வடிவேலு, சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிப்பில் 1996ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛காதல் தேசம்.' அந்த சமயத்தில் இளைஞர்களை காதலில் கிறங்கடித்த இந்த படம் இப்போது இசை நேர்த்தியுடன் புதிய கலர் சேர்ப்பில் தெலுங்கில் ‛பிரேம தேசம்' என்ற பெயரில் புத்தம் புது காப்பியாக இன்று(டிச., 9) ரீ-ரிலீஸாகி உள்ளது.
ஆரம்பத்தில் எதிரியாக இருந்து பின்னர் நண்பர்களாக மாறும் வினீத், அப்பாஸ் இருவரும் தபுவை காதலிக்கின்றனர். இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது தெரியவரும்போது அதன்பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் ஒரு வரிக்கதை. படத்தின் கதையோடு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. ‛‛ஹலோ டாக்டர் ஹார்ட் வீக் டாக்டர், என்னை காணவில்லையே நேற்றோடு'' போன்ற பாடல்களுடன் ‛முஸ்தபா முஸ்தபா' என்ற நண்பர்கள் பாடலும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. தலைமுறைகளை தாண்டி இன்றும் இந்த பாடல் பிரபலமாக திகழ்கிறது.
கே.டி.குஞ்சுமோன் தயாரித்த இந்த படம் ஆந்திரா, தெலுங்கானவில் இன்று 200க்கும் அதிகமான திரை அரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டுள்ளது.