என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் ஹனுமான். வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு கவுரவம் ஹரி, அனுதேவ், கிருஷ்ணா சவுரப் என மூன்று பேர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன. விரைவில் படம் வெளியாக உள்ள நிலையில் கடந்த நவம்பர் 15ம் தேதி டீசர் வெளியிடப்பட்டது. தற்போது இந்த டீசருக்கு 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. பேண்டஸி படமாக உருவாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.