எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் | பிளாஷ்பேக் : ஹிந்திப் படத்தை ரீமேக் செய்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்' | நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை | அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் |

பொதுவாகவே எல்லா முன்னணி நடிகர்களுக்கும் டூப் இருப்பார்கள். ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் முன்னணி நடிகர்களுக்கு பதிலாக டூப் நடிப்பார்கள். காரணம் பலகோடி முதலீட்டில் எடுக்கப்படும் படம் சிறு விபத்து காரணமாக நின்றுவிடும் வாய்ப்பு உண்டு. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வழக்கத்தில் இருக்கும் விஷயம்.
பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்களுக்கு டூப்பாக நடிக்க நிரந்தரமாக ஒருவரை வைத்திருப்பார்கள். ஆனால் அவரை வெளி உலகிற்கு காட்ட மாட்டார்கள். தங்கள் இமேஜ் போய்விடும் என்பதால் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் அஜித் எதிலும் வித்தியாசமானவராச்சே. துணிவு படத்தில் தனக்கு டூப் போட்டவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். அந்த போட்டோ இப்போது வைராக பரவி வருகிறது. அஜித்தின் வெளிப்படத்தன்மைய சிலர் பாராட்டினாலும். பெரும்பாலானவர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.




