பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தில் 'நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம்' என்ற குழு ஒன்று கடந்த 88 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிகை நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் அமெரிக்காவில் முதலாவதாக இக்குழு இந்த ஆண்டிற்கான விருதுகளை அறிவித்துள்ளது. அதில் தெலுங்குத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலிக்கு சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கூட தேர்வாகாமல் போனது 'ஆர்ஆர்ஆர்' படம். அப்படியிருக்க அந்தப் படத்தை இயக்கிய ராஜமவுலிக்கு இப்படி ஒரு அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது என சில அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ராஜமவுலிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்குழு கவனத்தை அவர் ஈர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
ராஜமவுலிக்கு இந்த விருது கிடைத்துள்ளதற்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.