சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கியவர் கல்யாண். இவர் தற்போது காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கோஷ்டி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் கே .எஸ். ரவிக்குமார், யோகி பாபு, ரெடின் லிங்ஸ்லி , மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள விடுங்கடா விடுங்கடா என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். விவேக் எழுதியுள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணன், விவேக் - மெர்வின், பிரேம்ஜி, லியோன் ஜேம்ஸ், சாம் சிஎஸ், நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட 7 இசையமைப்பாளர்களுடன் சத்ய பிரகாஷ், குணா ஆகியோரும் இணைந்து பின்னணி பாடி உள்ளார்கள். இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.