'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள ‛கட்டா குஸ்தி' படம் நாளை(டிச., 2) வெள்ளியன்று வெளியாகிறது. குஸ்தி சண்டை உடன் கணவன் மனைவி இடையே நடக்கும் குஸ்தியையும் மையமாக வைத்து காமெடியாக இந்த படத்தை எடுத்துள்ளனர். முனிஷ்காந்த், கருணாஸ், காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர்களை போன்று இந்த படத்திற்காக ஐஸ்வர்ய லட்சுமி ஜிம்மிற்கெல்லாம் சென்று உடலை பிட்டாக மாற்றி உள்ளார். அதோடு பயிற்சியாளர் உதவியோடு குஸ்தி போடும் பயிற்சி எல்லாம் எடுத்து, படத்திலும் ஆண்களை தூக்கி போட்டு குஸ்தி எல்லாம் செய்து நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் போன்று இந்த படத்திலும் ஐஸ்வர்ய லட்சுமியின் நடிப்பு பாராட்டு பெறும் என்கிறார்கள்.