கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடிக்க 2015ல் வெளிவந்த பேய்ப் படம் 'டிமான்டி காலனி'. தனது அறிமுகப் படத்திலேயே யார் இவர் என கவனிக்க வைத்தவர் அஜய் ஞானமுத்து. அடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த வருடம் அவரது இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் நடித்த 'கோப்ரா' படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்தது.
அடுத்ததாக 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகப்படப்பிடிப்பை நேற்று முதல் ஆரம்பித்துள்ளார் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தில் நடித்த அருள் நிதி கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அருள்நிதி நடித்து இந்த ஆண்டில் 'டி பிளாக், தேஜாவு, டைரி' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'ராட்சசி' படத்தை இயக்கிய கௌதம் ராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வரும் அருள்நிதி அடுத்து 'டிமான்டி காலனி 2' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்படத்தை அருள்நிதியே தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் படத்தின் இயக்குனரான ஞானமுத்து மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.