லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத். சங்கராபரணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தமிழில் குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார் விஸ்வநாத்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது கே.விஸ்வநாத்தை அவரது அவரது வீட்டிற்கே நேரில் சென்று பார்த்து, ஆசி பெற்றுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. கமலை வைத்து தெலுங்கில் சாகர சங்கமம்( தமிழில் சலங்கை ஒலி) என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் விஸ்வநாத். அதோடு கமலின் குருதிப்புனல், உத்தமவில்லன் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.