கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

மனிதன் ஓநாயாக மாறும் கதைகள் ஹாலிவுட் படங்களில் அதிகமாக வந்திருக்கிறது. தற்போது ஹிந்தியில் பெடியா என்ற பெயரில் ஒரு ஓநாய் படம் தயாராகி இருக்கிறது. அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான். , கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜி நடித்துள்ளனர். சச்சின் ஜிகார் இசை அமைத்துள்ளார், ஜிஷ்னு பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 25ம் தேதி வெளிவருகிறது.
ஹிந்தியில் தயாராகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் படம் வெளியாகிறது. புராண காலத்து விலங்கு ஒன்று கடித்ததால் ஓநாயாக மாறுகிறார் வருண் தவான். இந்த சாபத்திலிருந்து அவர் தப்பித்தாரா, இல்லை அவருக்குள் புகுந்த அசுரன் வென்றானா என்பதுதான் படத்தின் கதை.