தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது மீண்டும் கதையின் நாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார் .இந்த படத்திற்கு 'தூக்குதுரை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார்.
அட்வென்ச்சர் த்ரில்லர் படமான 'ட்ரிப்' படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.
யோகிபாபு'வுடன் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.