'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது |
கன்னடத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் சினிமாவை தாண்டி, சமூகம், அரசியல் களத்திலும் பணியாற்றி வருகிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெங்களுரு தொகுதில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். பிரகாஷ்ராஜின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான நடிகர்கள் அவருடன் நடிக் க மறுப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. என்னோடு நடிக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால், என் அரசியல் நடவடிக்கைகளும், கருத்துக்களும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விலகுகிறார்கள். அவர்களின் (ஹீரோக்கள்) விலகலால் என் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் வருத்தம் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பல நடிகர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை. என்கிறார் பிரகாஷ்ராஜ்.