ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள திரைப்படம் 'காரி' . சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். வில்லனாகஜேடி சக்கரவர்த்தியும், முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவ-25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.