சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ், தெலுங்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் கதாநாயகியாக நடித்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 'பாகமதி, சைலன்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது. 'சைலன்ஸ்' படம் கூட தியேட்டர்களில் வெளியாகாமல் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.
அதற்குப் பிறகு அனுஷ்கா பற்றிய செய்திகள் கூட ஊடகங்களில் அதிகம் வராமல் இருந்தது. சில படங்களில் அவர் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்தாலும் அவை உறுதியாகாமலே இருந்தது. இந்நிலையில் நேற்று அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் புதிய படத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மகேஷ் இயக்கத்தில், அனுஷ்கா நடிக்கும் அப்படத்தின் கதாபாத்திர அறிமுகமாக போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அன்விதா ரவளி ஷெட்டி என்ற செப் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார். நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் அனுஷ்காவின் 48வது படமாக உருவாக உள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.