செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‛வாரிசு'. ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று(நவ., 5) மாலை 5.30 மணியளவில் வெளியானது. தமன் இசையில் விவேக் எழுதி உள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடி உள்ளார். அவருடன் சேர்ந்து பாடகி எம்எம் மானஸி என்பவரும் பாடி உள்ளார்.
பக்கா கிராமத்து குத்துப்பாடல் போன்று உருவாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலுக்கு விஜய், ராஷ்மிகாவின் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என தெரிகிறது. லிரிக் வீடியோவில் வரும் ஒரு சில காட்சிகளிலேயே இருவரும் பிரமாதமாய் நடனம் ஆடி உள்ளார். இதற்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். வெளியான 15 நிமிடத்திலேயே இந்த பாடலுக்கு ரூ.5.75 லட்சம் பார்வைகள் கிடந்தன. அரைமணிநேரத்திற்குள் 10 லட்சம் பார்வைகளை கடந்தன. ரஞ்சிதமே பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.