பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் டைரக்ஷனில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் ராம்சரண். ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தின் மூலம் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் மீண்டும் இவர்களது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் இன்னும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதற்கான பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமவுலி பேசும்போது, சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உள்ள படம் பற்றிய ஒரு புதிய தகவலை தெரிவித்தார். யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்ல போகிறேன் என்று கூறிய ராஜமவுலி, சுகுமார் படத்தில் ராம்சரண் நடிக்க இருக்கும் படத்தின் ஓப்பனிங் சண்டைக்காட்சியை ஏற்கனவே சுகுமார் படமாக்கி விட்டார் என்றும் அந்த காட்சி திரையில் தெறிக்கவிடும் விதமாக இருக்குமென்றும் கூறியுள்ளார்.
இதற்கு மேல் இந்த படம் பற்றி கூறினால் நிச்சயமாக சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என்றும் ஜாலியாக கமென்ட் அடித்தார் இயக்குனர் ராஜமவுலி. ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கு ராஜமவுலி வைத்த அதிரடியான ஒப்பனிங் சண்டைக்காட்சி இப்போதுவரை ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அதற்கு இணையாக தன்னுடைய படத்தின் ஓப்பனிங் சண்டைக்காட்சியும் இருக்க வேண்டுமென்று பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இந்த சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளாராம் சுகுமார். தற்போது புஷ்பா-2 படத்தை அவர் இயக்கி வந்தாலும், புஷ்பா முதல் பாகம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே இந்த படப்பிடிப்பை நடத்தியுள்ளார் சுகுமார்.