காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படம் மூலமாக தமிழில் நுழைந்தவர் நடிகை ஹன்சிகா. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பயணித்து வரும் ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென சோஹைல் கத்தூரியா என்கிற தொழிலதிபரை காதலிப்பதாக சமீபத்தில் பிரான்சில் உள்ள ஈபிள் டவர் முன்பாக நின்று காதலை வெளிப்படுத்தியதுடன், அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார் ஹன்சிகா. ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹன்சிகா திருமணம் செய்ய இருப்பவர் இருக்கும் சோஹைல் கத்தூரியா ஏற்கனவே திருமணமானவர் என்றும், கடந்த 2016ல் அவருக்கும் ரிங்கி என்கிற பெண்ணுக்கும் திருமணம் நடந்த தகவலும், அதுகுறித்த வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல அந்த திருமண நிகழ்வுகளில் சங்கீத் நிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்வுகளில் ஹன்சிகாவும் பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி சோஹைல் கத்தூரியாவும் ஹன்சிகாவும் துணி ஏற்றுமதி வியாபாரத்தில் பார்ட்னர்களாக இருந்துள்ளனர். சோஹைல் கத்தூரியா தனது முதல் மனைவியுடன் இருந்து பிரிந்த பின்னர் இவர்களுக்குள் இருந்த நட்பு, காதலாக மாறியது என்றும் டிசம்பர் 3ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.